Trichy district writers' association has decided to conduct a short story competition in memory of the famous writer Vindhan. The first prize is Rs. 10,000, 2nd prize is Rs. 5, 000 and 3rd is Rs. 3, 000.
திருச்சி: மறைந்த எழுத்தாளர் விந்தன் நினைவாக சிறுகதைப் போட்டி ஒன்றை தி்ருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அறிவி்த்துள்ளது.
இது குறித்து தி்ருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
மறைந்த எழுத்தாளர் விந்தன் நினைவாக சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த தி்ருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் அரசியல் தவிர்த்து, சமூக சிந்தனைகள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
சிறுகதைகள் ஏ 4 தாளில் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனுப்பப்படும் கதைகள் இதுவரை எந்த இதழிலும் வெளிவராதவையாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் சிறுகதைக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 5 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரமும் வழங்கப்படும்.
சிறுகதைகள் அனுப்ப வேண்டிய முகவரி:
வை. ஜஹவர் ஆறுமுகம்,
தலைவர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்,
எண் 2 9, கிருஷ்ணமூர்த்தி நகர்,
திருச்சி - 21.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Via: oneindia.in